search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அடிமைத் தனத்தின் சின்னம் அழிந்தது... கர்தவ்யா பாதையை திறந்து வைத்து பிரதமர் மோடி பேச்சு
    X

    அடிமைத் தனத்தின் சின்னம் அழிந்தது... கர்தவ்யா பாதையை திறந்து வைத்து பிரதமர் மோடி பேச்சு

    • நேதாஜியின் பிரம்மாண்ட சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • இந்தியா கேட்டில் உள்ள நேதாஜியின் சிலை இப்போது நமக்கு உத்வேகம் அளித்து வழிகாட்டும் என்றார் பிரதமர்

    புதுடெல்லி:

    டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம், மத்திய அரசு செயலகம், பிரதமர், துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்டோருக்கான குடியிருப்புகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது சென்ட்ரல் விஸ்டா திட்டம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான ராஜபாதை கர்தவ்யா பாதை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த பாதையை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார். மேலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரம்மாண்ட சிலையையும் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    டெல்லி ராஜபாதையின் பெயர் மாற்றம் நாட்டிற்கு புதிய சக்தியையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. அடிமைத் தனத்தின் சின்னமாக இருந்த ராஜபாதை இப்போது வரலாற்றில் இருந்து அழிக்கப்பட்டுள்ளது.

    சுபாஷ் சந்திரபோஸ் காட்டிய வழியை இந்தியா பின்பற்றியிருந்தால், நாடு புதிய உச்சத்தை எட்டியிருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவற்றை மறந்துவிட்டோம். இந்தியா கேட்டில் உள்ள நேதாஜியின் சிலை இப்போது நமக்கு உத்வேகம் அளித்து வழிகாட்டும். கடந்த 8 ஆண்டுகளில் நேதாஜியின் லட்சியங்கள் மற்றும் கனவுகளை நிறைவேற்றும் வகையில் பல முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×