search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல் : 94 தொகுதிகளில் பிரசாரம் நிறைவடைந்தது
    X

    3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல் : 94 தொகுதிகளில் பிரசாரம் நிறைவடைந்தது

    • 3-ம் கட்ட தேர்தல் நடக்கும் 94 தொகுதிகளும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடங்கி உள்ளது
    • குஜராத் மாநிலத்தில் 26 தொகுதிகள், கோவாவில் 2 தொகுதிகளுக்கு ஒரே கட்ட மாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை 7 கட்டங்களாக நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

    அதன்படி கடந்த மாதம் 19-ந்தேதி 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. கடந்த 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது.

    இதையடுத்து 3-ம் கட்டமாக அசாம், பீகார், குஜராத், கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 94 தொகுதிகளிலும் கடந்த 12-ந்தேதி மனுத் தாக்கல் தொடங்கியது. 19-ந்தேதி மனுத்தாக்கல் நிறைவு பெற்றது.

    இதையடுத்து கடந்த மாதம் 22-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு 94 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் இன்று நிறைவு பெற்றது.

    3-ம் கட்ட தேர்தல் நடக்கும் 94 தொகுதிகளும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடங்கி உள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் 26 தொகுதிகள், கோவாவில் 2 தொகுதிகளுக்கு ஒரே கட்ட மாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    கர்நாடகாவில் 14 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், மகாராஷ்டிரத்தில் 11 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 10 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 4 தொகுதிகள், தத்ரா நகர்ஹவேலி யூனியன் பிரதேசத்தில் 2 தொகுதிகள், காஷ்மீரில் ஒரு தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடத்தப்பட இருக்கிறது.

    Next Story
    ×