

கலைஞர்கள் பலரும் தங்களது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு சமூக வலைதளங்கள் உதவுகின்றன. சிறு குழந்தைகள் முதல் இளைஞர்கள், இளம்பெண்கள், பெரியவர்கள் என பலரும் தங்களது திறமைகளை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிடுகின்றனர். அதில் சில வீடியோக்கள் பயனர்களை மிகவும் கவர்ந்து வைரலாகி விடும்.
அதுபோன்று ஒரு இசைக்கலைஞரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், மகேஷ் ராகவன் என்ற இசைக்கலைஞர் தனது ஐ-பாடில் சித்தார் இசையை வாசிக்கிறார். இந்த வீடியோவை பிரபல தொழிலதிபரான ஆனந்த் மகிந்திரா தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்து பாராட்டி உள்ளார். மகேஷ் ராகவனின் திறமை நம்ப முடியாத அளவுக்கு ஈர்க்கப்பட்டுள்ளது. விடாமுயற்சியுடன் கூடிய பயிற்சிக்கு பாராட்டுக்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு வைரலாகி பயனர்கள் பலரும் மகேஷ் ராகவனை பாராட்டி வருகின்றனர்.