18 ஓ.டி.டி. தளங்களை அதிரடியாக முடக்கியது மத்திய அரசு

தளங்களில் ஒளிபரப்பப்படும் காட்சிகள் ஆபாசமாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டதாகவும் கண்டறியப்பட்டது.மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் பொருட்படுத்தாமல் இருந்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
18 ஓ.டி.டி. தளங்களை அதிரடியாக முடக்கியது மத்திய அரசு
Published on

புதுடெல்லி:

மோசமான, ஆபாசமான உள்ளடங்களை ஒளிபரப்பியதற்காக 18 ஓ.டி.டி. தளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

இணையத்தில் ஆபாச படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களை ஒளிபரப்பியதற்காக 18 ஓ.டி.டி. தளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. மேலும் 19 இணையதளங்கள், 10 செயலிகள், 57 சமூக வலைதள கணக்குகளும் முடக்கம்.

இந்த தளங்களில் ஒளிபரப்பப்படும் காட்சிகள் ஆபாசமாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டதாகவும் கண்டறியப்பட்டது. இதையடுத்து மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் பொருட்படுத்தாமல் இருந்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com