என் மலர்
இந்தியா

நகைக்கடையில் கைவரிசை - காட்டிக்கொடுத்த சிசிடிவி
- வீடியோ வைரலான நிலையில், பயனர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- கடையில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், திருடுவதற்கு எங்கிருந்து தைரியம் வருகிறது என்பது புரியவில்லை என்று பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
'இன்றைய காலகட்டத்தில், காவல்துறையினருக்கு சிசிடிவி முக்கியமான ஒரு கருவி'யாக பயன்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. சமீபகாலங்களில், சிசிடிவி உதவியோடு பல குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்திருக்கிறது காவல்துறை. வீடு, தெரு, சாலை என பல இடங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல், இப்போதெல்லாம், பெரும்பாலான கடைகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லாமல் இல்லை. இது திருட்டு சம்பவங்களைத் தடுக்க அல்லது கண்டறிய உதவுகிறது.
கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவால் கடையில் திருட முயல்வதும், அதனை கடை உரிமையாளர் கண்டுபிடித்து அது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாகுவதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அப்படி ஒரு வீடியோ தான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு நகைக்கடையில் ஏராளமான பெண்கள் அமர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது. அவர்களுடன் 2 சிறுவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் நகைகளை காட்டும்படி கடைக்காரரிடம் கேட்கின்றனர். கடைக்காரரும், ஒரு பெண்ணும் சேர்ந்து அவர்களுக்கு நகைகளைக் காட்டுகின்றனர்.
அப்போது சிறுவன் ஒருவன் கடைப்பெண்ணிடம் வேறு நகையை காட்டும்படி கூற அவரும் கடைக்குள் செல்கிறார். அப்போது அச்சிறுவன் அங்கு வைக்கப்பட்டிருந்த மோதிரத்தை திருடுகிறான். இதனை கவனித்த பெண் கடையில் இருப்பவரிடம் கூற அவர் வந்து சிறுவனை அடிக்க ஆரம்பித்தபோது அவர் ஒன்றும் தெரியாதது என்று கூற சிறிது நேரத்தில் மோதிரம் கீழே விழுகிறது. இதையடுத்து சிறுவனை உடன் வந்தவர்களும் அடிக்க வீடியோ முடிகிறது.
இந்த வீடியோ வைரலான நிலையில், பயனர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், என்ன மாதிரியான திருடர்கள், அவர்கள் திருடுவதற்கு முன்பு கேமராவைக் கூட பார்க்க மாட்டார்களா? என்று கூற மற்றொரு பயனர் கடையில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், திருடுவதற்கு எங்கிருந்து தைரியம் வருகிறது என்பது புரியவில்லை என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Kalesh over the Guy Got Caught Stealing Gold Ring
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 21, 2024
pic.twitter.com/Ir1OiuYuSe






