மின்சார ரெயிலில் பயணித்த நிதி மந்திரி: செல்பி எடுத்து மகிழ்ந்த பயணிகள்

காட்கோபரில் இருந்து கல்யாண் செல்லும் ரெயிலில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பயணம் செய்தார்.அப்போது சக பயணிகளுடன் கலந்துரையாடிய அவர் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.
மின்சார ரெயிலில் பயணித்த நிதி மந்திரி: செல்பி எடுத்து மகிழ்ந்த பயணிகள்
Published on

மும்பை:

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மும்பையின் காட்கோபரில் இருந்து கல்யாண் செல்லும் மின்சார ரெயிலில் இன்று பயணம் செய்தார். அப்போது மகாராஷ்டிர மாநில முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

சக பயணிகளுடன் கலந்துரையாடிய நிர்மலா சீதாராமன் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். சக பயணிகள் போல் நிதி மந்திரி பயணம் செய்ததை கண்டு மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

மும்பையின் காட்கோபரில் இருந்து கல்யாண் செல்லும் மின்சார ரெயிலில் ஒவ்வொரு நாளும் 60 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com