என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
Byமாலை மலர்5 Oct 2022 4:27 PM GMT
- இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
- காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
காசியாபாத்:
உத்தர பிரதேச மாநிலம் லோனி நகரில் உள்ள பப்லூ கார்டன் காலனியில் உள்ள ஒரு வீட்டில் இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்தது. இதனால் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. 10 மாத குழந்தை உள்பட 6 பேரும் இடிபாடுகளில் சிக்கி புதைந்தனர்.
தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் 4 பேர் வழியிலேயே இறந்துவிட்டனர். 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து முதவல்வர் யோகி ஆதித்யநாத் வேதனை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Next Story
×