பெண்ணுக்கு 3 நிமிடங்களில் கிடைத்த ஆன்-லைன் ஆர்டர்

தாய் இனிப்பு செய்வதற்காக பயன்படுத்தும் அச்சு ஒன்றை ஆர்டர் செய்திருந்த நிலையில், அவருக்கு 3 நிமிடங்களில் அந்த பொருள் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீவஸ்தவாவின் பதிவு வைரலான நிலையில், பயனர்கள் பலரும் 3 நிமிடங்களில் ஆர்டரை பெறுவது சாத்தியமில்லை என பதிவிட்டனர்.
பெண்ணுக்கு 3 நிமிடங்களில் கிடைத்த ஆன்-லைன் ஆர்டர்
Published on

லக்னோவை சேர்ந்த ஸ்ரீவஸ்தவா என்ற பயனர் எக்ஸ் தளத்தில் பிளிங்கிட் நிறுவனத்தின் சேவையை பாராட்டி ஒரு பதிவு செய்திருந்தார். ஆன்-லைன் மூலம் பொருட்களை வினியோகிக்கும் பிளிங்கிட்டில் ஸ்ரீவஸ்தவா தனது தாய் இனிப்பு செய்வதற்காக பயன்படுத்தும் அச்சு ஒன்றை ஆர்டர் செய்திருந்த நிலையில், அவருக்கு 3 நிமிடங்களில் அந்த பொருள் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக அந்த நிறுவனத்தின் சேவையை பாராட்டி இருந்தார். அதில் எனது அம்மா, குஜியா (வட இந்தியாவில் பிரபலமான இனிப்பு) செய்ய பயன்படுத்தும் அச்சு உடைந்திருந்தது. அதை மாற்றுவதற்காக பிளிங்கிட்டில் ஆர்டர் செய்திருந்தேன். 3 நிமிடங்களில் அதனை வினியோகம் செய்ததற்கு பாராட்டுக்கள் என குறிப்பிட்டிருந்தார்.

அவரது பதிவுக்கு பிளிங்கிட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அல்பிந்தர் திண்ட்சா பதில் அளித்து, 'உங்கள் பார்வையை மாற்ற முடிந்ததில் மகிழ்ச்சி. உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய ஹோலி' என்று பதிவிட்டார். ஸ்ரீவஸ்தவாவின் பதிவு வைரலான நிலையில், பயனர்கள் பலரும் 3 நிமிடங்களில் ஆர்டரை பெறுவது சாத்தியமில்லை என பதிவிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com