

பெங்களூரு:
பெங்களூரு ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுப்பிரிவினரும் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பஸ், ரெயில் நிலையங்கள், மக்கள் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்புக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
இதற்கிடையே, பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்தது. தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்காக புதிய பொலிவுடன் ராமேஸ்வரம் கபே ஓட்டல் நாளை திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஓட்டல் நிர்வாகம் செய்து வருகிறது.