search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பேராசிரியர் ரத்தன் லால்
    X
    பேராசிரியர் ரத்தன் லால்

    ஞானவாபி மசூதி குறித்து பேஸ்புக்கில் பதிவிட்ட டெல்லி பேராசிரியர் கைது

    வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தருணத்தில், ரத்தன் லாலின் சிவலிங்கம் குறித்த டுவிட்டர் பதிவானது இழிவாகவும் ஆத்திரங்களை தூண்டும் வகையில் உள்ளது என புகார் எழுந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    டெல்லி, வாரணாசி ஞானவாபி மசூதியில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற வீடியோ ஆய்வில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து  டெல்லி இந்து கல்லூரி துணைநிலை பேராசிரியர் ரத்தன் லால் பதிவு ஒன்றை சமூக 

    வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இரண்டு மதங்களுக்கு இடையே பிரச்சனையை தூண்டும் விதமாக இருப்பதாக கூறி, நேற்று அவர் கைது செய்யப்பட்டார். 

    இது குறித்து போலீசார் கூறுகையில், “ ஞானவாபி வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தருணத்தில் ரத்தன் லாலின் 
    சிவலிங்கம் குறித்த டுவிட்டர் பதிவானது இழிவாகவும் ஆத்திரங்களை தூண்டும் வகையில் உள்ளது என்று வினீத் ஜிந்தால் என்ற  வழக்கறிஞர்  கடந்த செவ்வாய் கிழமை புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் ரத்தன் லால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது  செய்யப்பட்டுள்ளார்” என்று கூறினார்.

    மேலும், ரத்தன் லால்லின் கைதிற்கு காங்கிரஸ் தலைவர் திகிவிஜயா சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். ரத்தன் லாலுக்கு அரசியலமைப்பு கொடுத்துள்ள கருத்துரிமையின் படி பேசுவதற்கு உரிமை இருக்கிறது என கூறியுள்ளார்.
    Next Story
    ×