என் மலர்

  இந்தியா

  கொரோனா பரிசோதனை
  X
  கொரோனா பரிசோதனை

  புதிதாக 2,259 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 ஆயிரமாக சரிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாடு முழுவதும் இதுவரை 191 கோடியே 96 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 15,12,766 டோஸ்கள் அடங்கும்.
  புதுடெல்லி:

  இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. எனினும் தினசரி பாதிப்பு சற்று ஏறுவதும், பின்னர் இறங்குவதுமாக உள்ளது.

  இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,259 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  நேற்று பாதிப்பு 2,364 ஆக இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.

  நேற்று அதிகபட்சமாக டெல்லியில் 520, கேரளாவில் 501, மகாராஷ்டிராவில் 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியானாவில் 267, உத்தரபிரதேசத்தில் 129, கர்நாடகாவில் 124 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 31 லட்சத்து 31 ஆயிரத்து 822 ஆக உயர்ந்தது.

  கொரோனா பாதிப்பால் மேலும் 20 பேர் பலியாகி உள்ளனர். இதில் கேரளாவில் திருத்தியமைக்கப்பட்ட மரணங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட 17 மரணங்கள் அடங்கும்.

  இதுதவிர நேற்று உத்தரபிரதேசத்தில் 2, டெல்லியில் ஒருவர் இறந்துள்ளனர். இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 5,24,323 ஆக உயர்ந்தது.

  கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2,614 பேர் மீண்டுள்ளனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 25 லட்சத்து 92 ஆயிரத்து 455 பேர் குணமடைந்துள்ளனர்.

  தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 15,044 ஆக சரிந்துள்ளது. இது நேற்றை விட 375 குறைவு ஆகும்.

  நாடு முழுவதும் இதுவரை 191 கோடியே 96 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 15,12,766 டோஸ்கள் அடங்கும்.

  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 84.58 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 4,51,179 மாதிரிகள் அடங்கும்.

  Next Story
  ×