என் மலர்

  இந்தியா

  தீ விபத்து
  X
  தீ விபத்து

  டெல்லி தொழிற்சாலையில் தீ விபத்து- ஒருவர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியின் வடகிழக்கு பகுதியில் எலெக்ட்ரிக் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
  புதுடெல்லி:

  டெல்லியின் வடகிழக்கு பகுதியில் முஸ்தபாபாத் பகுதியில் எலெக்ட்ரிக் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் முதல் தளத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் குறிப்பிட்ட பகுதிக்கு ஏழு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. சுமார் அரைமணி நேரத்திற்கு பின்னர்  தீ  கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

  மேலும், இந்த விபத்தில் ஏழு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் என்று தீயணைப்புத் துறை இயக்குநர் அதுல் கார்க் கூறியுள்ளார்.
  Next Story
  ×