என் மலர்

  இந்தியா

  கொரோனா பரிசோதனை
  X
  கொரோனா பரிசோதனை

  மும்பையில் கொரோனா பாதிப்பு 2 மடங்கு உயர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மும்பையில் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 61 ஆயிரத்து 846 ஆக உயர்ந்தது. இறப்பு எண்ணிக்கை நகரில் 19 ஆயிரத்து 566 ஆக உள்ளது.
  மும்பை

  மராட்டியத்தில் இன்று 266 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 லட்சத்து 81 ஆயிரத்து 235 ஆக உயர்ந்துள்ளது.

  இருப்பினும் புதிய இறப்புகள் எதுவும் ஏற்படாததால் இறப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 855 ஆக தொடர்கிறது. இன்று 241 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தனர். இதன்மூலம் மராட்டியத்தில் குணமானவர்களின் எண்ணிக்கை 77 லட்சத்து 31 ஆயிரத்து 829 ஆக உள்ளது. தற்போது மராட்டியத்தில் 1,551 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

  அதேநேரம் இன்று மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மும்பையை சேர்ந்தவர்கள் ஆவார். குறிப்பாக நேற்று  74 பேருக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், இன்று இரண்டு மடங்காக அதிகரித்து 158 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

  இதன்மூலம் மும்பையில் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 61 ஆயிரத்து 846 ஆக உயர்ந்தது. இறப்பு எண்ணிக்கை நகரில் 19 ஆயிரத்து 566 ஆக உள்ளது. தற்போது நகரில் 932 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
  Next Story
  ×