என் மலர்

  இந்தியா

  சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்
  X
  சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்

  10 கிலோ போதைப்பொருட்களை கொண்டு சென்ற பாகிஸ்தான் ட்ரோன்- சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்பு படையினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எல்லை பாதுகாப்புப்படையினர் பாகிஸ்தான் ட்ரோனை சுட்டு வீழ்த்தி பத்து கிலோ போதைப்பொருளை கைப்பற்றினர்.
  சண்டிகர்:

   பஞ்சாப் எல்லையில் ரோந்தில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தினர். அதில் பத்து கிலோ எடையுள்ள போதைப்பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த போதை பொருட்களை கைப்பற்றியுள்ளனர். இதனால் பாகிஸ்தானின் மற்றொரு கடத்தல் முயற்சியை தடுத்துள்ளதாக பஞ்சாப் எல்லை பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர்.

  இது குறித்து எல்லை பாதுகாப்புப்படை டிஐஜி புபேந்தர் சிங் கூறியதாவது,  நேற்று இரவு 11.15 மணியளவில் ட்ரோன் பறக்கும் சத்தம் கேட்டு வீரர்கள் அந்த ட்ரோனை தாக்கினர்.  ஆய்வுக்கு பிறகு அந்த ட்ரோனானது பாகிஸ்தானில் இருந்து வந்தது என்று தெரிய வந்தது. அதிலிருந்து பத்து கிலோ எடையுள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் கூறினார். 
  Next Story
  ×