search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விசாரணை நடத்தும் போலீசார்
    X
    விசாரணை நடத்தும் போலீசார்

    மகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு: தம்பதி மீது ஆசிட் வீச்சு

    பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கடமை தவறியதற்காக கஜ்ரௌலா காவலர் தேஜ்பால் மற்றும் லோகேஷ் குமர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.
    மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி சிறுமியின் பெற்றோர் மீது குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் பில்பிட் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ராஜேஷ் என்பவர் மீது சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர். பின்னர், ராஜேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

    இந்நிலையில், வழக்கை வாபஸ் பெற வலிறுத்தி ராஜேஷின் கூட்டாளிகள் 5 பேர் சிறுமியின் பெற்றோர் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த தம்பதியனர் பரேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் ஆசிட் வீச்சில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர். இதில், அசிட் வீச்சில் ஈடுபட்ட நபர்கள் அதே பகுதியை சேர்ந்த அஜய், சோட்டலால், ராம்கிஷன், குட்டு மற்றும் ஹரிசங்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இருவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.   

    இதைதொடர்ந்து, பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கடமை தவறியதற்காக கஜ்ரௌலா காவலர் தேஜ்பால் மற்றும் லோகேஷ் குமர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.

    இதையும் படியுங்கள்.. தொடர் வன்முறை எதிரொலி: அனைத்து ரெயில்களும் ரத்து செய்து இலங்கை உத்தரவு
    Next Story
    ×