search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sex harassment"

    தனியார் பத்திரிக்கை ஒன்று நடத்திய ஆய்வில், பணியிடங்களில் பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல் வீதம் கடந்த 4 ஆண்டுகளில் 4 ஆயிரம் சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. #SexHarassment #India
    புதுடெல்லி:

    இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருவதாக நாளுக்கு நாள் செய்திகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் பெண்கள் பாதுகாப்புடன் வாழ தகுதியற்ற நாடாக இந்தியா உள்ளதாக சர்வதேச அறிக்கை வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், தனியார் பத்திரிக்கை நிறுவனம் ஒன்று, பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் தொல்லை குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் கடந்த 2014-ம் ஆண்டு வெறும் 371 வழக்குகள் மட்டுமே இருந்ததாகவும், 2018-ம் ஆண்டு அது 14 ஆயிரத்து 866 உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பீடு சுமார் 3 ஆயிரத்து 907 சதவிகிதம் அதிகம் ஆகும்.



    இந்த சதவிகிதம் வடமாநிலங்களில் குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தை தொடர்ந்து டெல்லி, அரியானா மாநிலங்களில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகள் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மீடூ மூலம் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சம்பவங்களை வெளிப்படுத்திவரும் நிலையில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #SexHarassment #India
    ×