என் மலர்

  இந்தியா

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  முதுகலை நீட் தேர்வு ஒத்தி வைப்பா?- தகவல் போலியானது என தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமூக வலைதளங்களில் பரவும் போலியான தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என்றும்,தேசிய தேர்வு வாரியம் கூறியுள்ளது.
  புதுடெல்லி:

  முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்ததேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், ஜூலை 9 ஆம் தேதி நடைபெறும் என்றும்,சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. 

  இது குறித்து விளக்கம் அளித்துள்ள தேசிய தேர்வு வாரியம் சமூக வலைதளத் தகவலை மறுத்துள்ளது. 

  முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப் பட்டுள்ளது என்று இணையத்தில் பரவும் தகவல் போலியானது என்றும் கூறிய தேசிய தேர்வு வாரியம், திட்டமிட்டபடி மருத்துவப் படிப்புகளக்கான நீட்தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

  சமூக வலைதளங்களில் பரவும் போலியான தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என்றும், தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://natboard.edu.in வரும் அறிவிப்புகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 

  மேலும், தேர்வு தொடர்பான தகவல்களை பெறுவதற்கு 011-45593000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
  Next Story
  ×