என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
X
புதிதாக 3,275 பேருக்கு தொற்று: கொரோனா தினசரி பாதிப்பு 2-வது நாளாக உயர்வு
Byமாலை மலர்5 May 2022 9:18 AM IST (Updated: 5 May 2022 9:18 AM IST)
நாடு முழுவதும் நேற்று 13,98,710 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 189 கோடியே 63 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,275 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 2,568 ஆக இருந்தது. நேற்று 3,205 ஆக உயர்ந்தது. இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
நேற்று அதிகபட்சமாக டெல்லியில் 1,354 பேருக்கு தொற்று உறுதியானது. அரியானாவில் 571, கேரளாவில் 386, உத்தரபிரதேசத்தில் 198, மகாராஷ்டிராவில் 188, கர்நாடகாவில் 148 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்த பாதிப்பு 4 கோடியே 30 லட்சத்து 91 ஆயிரத்து 393 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் திருத்தி அமைக்கப்பட்ட பட்டியலில் 52 மரணங்கள் சேர்க்கப்பட்டது. இதைத்தவிர டெல்லி, ராஜஸ்தான், அரியானாவில் நேற்று தலா ஒருவர் என மேலும் 55 பேர் இறந்துள்ளனர்.
இதுவரை தொற்று பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,23,975 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றின் பிடியில் இருந்து நேற்று 3,010 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 47 ஆயிரத்து 699 ஆக உயர்ந்தது.
தற்போது 19,719 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று முன்தினத்தை விட 210 அதிகமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, இதுவரை 83.93 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 4,23,430 மாதிரிகள் அடங்கும்.
இதையும் படியுங்கள்... கோடையில் ஒரு உருமாறிய கொரோனா அலை வரலாம்: ஆராய்ச்சி தகவல்
Next Story
×