search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஜ்நாத் சிங்
    X
    ராஜ்நாத் சிங்

    நமது ஏவுகணை அமைப்பு மிகவும் பாதுகாப்பானது - பாராளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் விளக்கம்

    இந்திய ஏவுகணை பாகிஸ்தான் பகுதியில் விழுந்தது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய ஏவுகணை ஒன்று பாகிஸ்தான் பகுதியில் கடந்த 9-ந் தேதி விழுந்தது. பராமரிப்பு பணியின்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுகணை தவறுதலாக பாய்ந்து சென்றுவிட்டது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என இந்திய ராணுவ அமைச்சகம் விளக்கம் அளித்தது. ஆனாலும், பாகிஸ்தான் இதை ஏற்க மறுத்தது. 

    இந்நிலையில், ஏவுகணை விவகாரம் தொடர்பாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பாராளுமன்றத்தில் இன்று விளக்கம் அளித்தார்.

    பாகிஸ்தானின் மியான்கன்னு நகரில் ஏவுகணை தவறுதலாக விழுந்தது. இதனால் யாருக்கும் பாதிப்பில்லை. இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆயுத அமைப்புகளின் பாதுகாப்பு விஷயத்தில் அரசாங்கம் அதிக முன்னுரிமை அளிக்கிறது. நமது ஏவுகணை அமைப்பு மிகவும் பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது என தெரிவித்தார். 

    Next Story
    ×