என் மலர்
இந்தியா

கோப்புப் படம்
புல்வாமா என்கவுண்டர் - பயங்கரவாதியை சுட்டுக் கொன்றது பாதுகாப்பு படை
பயங்கரவாதிகள் இருந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தபோது இரு தரப்பினருக்குமிடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், அவந்திபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, பயங்கரவாதிகள் இருந்த பகுதியை சுற்றி வளைத்தபோது இரு தரப்பினருக்குமிடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...கடையில் தீப்பிடித்ததால் வெடித்து சிதறிய எரிவாயு சிலிண்டர் - 4 பேர் உயிரிழப்பு
Next Story






