search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நீரஜ் கோயத்
    X
    நீரஜ் கோயத்

    உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் தப்ப உதவிய குத்துச்சண்டை வீரர்

    இந்திய குத்துச்சண்டை வீரர் நீரஜ் கோயத், உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த இந்திய மாணவர்கள் தப்ப உதவி செய்துள்ளார்.
    புதுடெல்லி :

    இந்திய குத்துச்சண்டை வீரர் நீரஜ் கோயத் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எனது குத்துச்சண்டை வரலாற்றில் உக்ரைன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு பலதடவை சென்றுள்ளேன். அந்த பிராந்தியத்தை சேர்ந்த குத்துச்சண்டை வீரர்களுடன் எனக்கு அறிமுகம் உள்ளது. அவர்கள் அடங்கிய ‘வாட்ஸ்அப்’ குழுவில் நான் இடம்பெற்றுள்ளேன்.

    உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள் என்னை தொடர்பு கொள்ளுமாறு அறிவிப்பு வெளியிட்டேன். அதை பார்த்து சில மாணவர்கள் என்னை தொடர்பு கொண்டனர். அவர்களுக்கு உதவுவதற்காக அந்த குத்துச்சண்டை வீரர்களுடன் விவாதித்தேன். அவர்கள் மூலமாக ஒரு வாடகை வாகன டிரைவரின் செல்போன் எண் கிடைத்தது. அவர், தலைநகர் கீவில் இருந்து மாணவர்களை அழைத்துச்செல்ல சம்மதம் தெரிவித்தார்.

    அவரது செல்போன் எண்ணை எனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பகிர்ந்தேன். அதைக்கண்டு தொடர்பு கொண்ட சுமார் 30 முதல் 35 இந்திய மாணவர்கள் லிவிவ் நகர் வழியாக போலந்து எல்லைவரை அழைத்து செல்லப்பட்டனர்.

    அவர்கள் எல்லையில் இருந்து போலந்து தலைநகருக்கு சென்று விமானத்தை பிடிக்க உதவுமாறு சமூக வலைத்தளம் மூலம் அழைப்பு விடுத்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படிக்கலாம்...உக்ரைன்-ரஷியா இடையே இன்று இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை
    Next Story
    ×