search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சாலை விபத்து
    X
    சாலை விபத்து

    மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு 29 ஆயிரம் சாலை விபத்துகள்

    மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு 29 ஆயிரம் சாலை விபத்துகள் நடந்து உள்ளன. 2020-ம் ஆண்டு மாநிலத்தில் 24 ஆயிரத்து 971 விபத்துகள் நடந்து உள்ளன.
    மும்பை :

    நாட்டில் அதிகம் விபத்து நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக மராட்டியம் உள்ளது. இதில் கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் 29 ஆயிரத்து 971 விபத்துகள் நடந்து உள்ளன. இந்த விபத்துகளில் 13 ஆயிரத்து 346 பேர் உயிரிழந்து உள்ளனர். 22 ஆயிரத்து 878 பேர் காயமடைந்து உள்ளனர். 2020-ம் ஆண்டு மாநிலத்தில் 24 ஆயிரத்து 971 விபத்துகள் நடந்து உள்ளன.

    இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17 சதவீதம் அதிகம் ஆகும். இதேபோல 2020-ல் 11 ஆயிரத்து 569 பேர் சாலை விபத்தில் பலியாகினர். 19 ஆயிரத்து 914 பேர் காயமடைந்தனர்.

    இதேபோல கடந்த ஆண்டு அதிகபட்சமாக மும்பையில் 2 ஆயிரத்து 43 விபத்துகள் நடந்து உள்ளன. இதேபோல நாசிக் ஊரகப்பகுதியில் 1,429, புனே ஊரகப்பகுதியில் 1,363, அகமதுநகரில் 1,360, கோலாப்பூரில் 1,031 விபத்துகள் நடந்து உள்ளன.

    இதில் அதிகபட்சமாக நாசிக்கில் 862 பேரும், புனே ஊரகப்பகுதியில் 798 பேரும், அகமதுநகரில் 706 பேரும், சோலாப்பூரில் 547 பேரும், ஜல்காவில் 527 பேரும் பலியாகி உள்ளனர்.

    இதுகுறித்து மாநில போக்குவரத்து கூடுதல் கமிஷனர் ஜே.பி. பாட்டீல் கூறுகையில், "விபத்துகளை தடுக்க செயல்படுத்துதல், பொறியியல், கல்வி, அவசர கால சாலை பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருவதாக" கூறினார். விபத்துகளை தடுக்க விதிமுறைமீறி வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக நெஞ்சாலை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
    Next Story
    ×