என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கொரோனாவுக்கு பயந்து ஆஸ்பத்திரி 4-வது மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை
திருப்பதி:
ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த குப்பம், லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 30). குடும்ப பிரச்சினை காரணமாக பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார்.
மயக்கமடைந்த அவரை குடும்பத்தார் மீட்டு குப்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு வாலிபருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவருக்கு கொரோனா சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளித்தனர். இதனால் பயந்து போன வாலிபர் கொரோனா தொற்று இருப்பதால் நான் பிழைக்க மாட்டேன் என இரவு முழுவதும் புலம்பியபடி இருந்துள்ளார்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரி 4-வது மாடிக்கு சென்ற வாலிபர் அங்கிருந்து கீழே குதித்தார். இதில் வாலிபரின் தலை சிதறி ரத்தம் பீறிட்டு கொட்டியது. இதில் துடிதுடித்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.