search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 மாதம் வரை வைரஸ் உடலில் இருக்கும்- புதிய ஆராய்ச்சியில் தகவல்

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைரஸ் 1 முதல் 2 மாதங்கள் வரை இருக்கும் என்று புதிய ஆராய்ச்சியில் தகவல் வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து உலகம் முழுவதும் பரவி உள்ளது.

    தற்போது தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவி உள்ளது. ஒமைக்ரானால் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைரஸ் 1 முதல் 2 மாதங்கள் வரை இருக்கும் என்று புதிய ஆராய்ச்சியில் தகவல் வெளியாகி உள்ளது.

    இங்கிலாந்தை சேர்ந்த எக்சிடெர் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தனிமைப்படுத்தப்படும் காலம் 5 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளன.

     

    கொரோனா பரிசோதனை

    இதேபோல இந்தியாவிலும், கொரோனா தனிமை காலம் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல தனிமைப்படுத்துதல் குறித்து புதிய வழிகாட்டுதலும் வெளியிடப்பட்டுள்ளது. இதை வைத்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட 177 பேரின் மாதிரிகள் புதிய சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் 10 பேரில் ஒருவருக்கு, 10 நாட்களுக்கு மேல் வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. 13 சதவீதம் பேருக்கு 10 நாட்களுக்கு பிறகும், வைரஸ் தொற்று இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்தது.

    மேலும் சிலருக்கு 2 மாதங்கள் வரை தொற்று அப்படியே இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் அறிகுறிகள் மறைந்துவிடும். அதாவது சிலருக்கு 68 நாட்கள் வரை வைரஸ் உடலில் இருக்கும் என்று புதிய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

    கொரோனா தொற்று 2 மாதங்கள் வரை இருக்கும் என்பதால் குறிப்பிடத்தக்க பரவும் ஆபத்து இருப்பதாக தெரியவருகிறது. இதனால் இந்த பரவலை தடுக்க மக்கள் அதிகமாக பாதிக்கக் கூடிய பகுதிகளில் புதிய சோதனையை பயன்படுத்த வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக எக்சிடெர் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் லோர்னா ஹாரிஸ் கூறியதாவது:-

    இது ஒப்பீட்டு அளவில் சிறிய ஆய்வாக இருந்தாலும், செயலில் உள்ள வைரஸ் 10 நாட்களுக்கு மேலாக நீடிக்கலாம் என்றும், மேலும் பரவும் அபாயத்தை ஏற்படுத்தலாம் என்றும் எங்கள் முடிவுகள் தெரிவிக்கின்றன.

    இந்த நபர்களை பற்றி மருத்துவ ரீதியாக குறிபிட்ட தக்க தகவல் எதுவும் இல்லை. அதாவது அவர்கள் யார் என்று நாங்கள் கணிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்... இன்று மாலை தைப்பூசத் தேரோட்டம்: தடையை மீறி காவடிகளுடன் பழனியில் குவிந்த பக்தர்கள்

    Next Story
    ×