என் மலர்

  இந்தியா

  பிரதமர் மோடி
  X
  பிரதமர் மோடி

  தேச பாதுகாப்பில் முக்கிய பங்களிக்கும் நம் ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கங்கள்- பிரதமர் மோடி வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இயற்கை பேரிடர் உள்ளிட்ட நெருக்கடிகளின் போது சக குடிமக்களுக்கு உதவுவதில் ராணுவ வீரர்கள் முன்னணி வகிக்கின்றனர் என மோடி கூறினார்.
  புது டெல்லி:

  1949-ம் ஆண்டு ஜன., 15-ம் தேதி ஆங்கிலேயரிடம் இருந்து ராணுவ பொறுப்பு இந்தியர்களுக்கு மாற்றப்பட்டது. இப்பொறுப்பை ஆங்கிலேயர் ராய் பட்சரிடம் இருந்து, இந்தியாவின் 'கரியப்பா' ஏற்றார். இந்த வரலாற்று நிகழ்வை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜன. 15-ம் தேதி ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. 

  இந்நிலையில் இன்று ராணுவ தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

  இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது:-

  ராணுவ தினத்தை முன்னிட்டு, நமது துணிச்சலான, மரியாதைக்குரிய ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். இந்திய ராணுவம் அதன் துணிச்சலுக்கும், தொழில்முறைக்கும் பெயர் பெற்றது. தேசப் பாதுகாப்பில் இந்திய ராணுவத்தின் விலைமதிப்பற்ற பங்களிப்பை வார்த்தைகளால் நியாயம் சொல்ல முடியாது.

  இந்திய ராணுவ வீரர்கள் மோசமான நிலப்பரப்புகளில் பணியாற்றுகிறார்கள். இயற்கை பேரிடர் உள்ளிட்ட நெருக்கடிகளின் போது சக குடிமக்களுக்கு உதவுவதில் முன்னணி வகிக்கின்றனர். வெளிநாடுகளிலும் அமைதி காக்கும் பணிகளில் ராணுவத்தின் சிறப்பான பங்களிப்பிற்காக இந்தியா பெருமை கொள்கிறது.

  இவ்வாறு பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.
  Next Story
  ×