search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணல் சிற்பம்
    X
    மணல் சிற்பம்

    150 கோடி தடுப்பூசி செலுத்திய இந்தியா - மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து

    மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், கொரோனா வைரஸ் பரவல் குறித்த விழிப்புணர்வுக்காக ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணல் சிற்பத்தை நேற்று வடிவமைத்தார்.
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக், சிறந்த மணல் சிற்ப கலைஞராவார்.

    உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

    இதற்கிடையே, இந்தியாவில் 150 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத் துறை  தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கொரோனாவை கட்டுப்படுத்த 150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், 150 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளதைக் குறிக்கும் வகையில் ஒடிசா பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து பெருமை சேர்த்துள்ளார் சுதர்சன் பட்நாயக்.

    அதில் 150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ள அவர், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    Next Story
    ×