search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தரபிரதேசத்தில் கையில் குழந்தையுடன் இருந்த வாலிபரை அடித்த போலீஸ் அதிகாரி
    X
    உத்தரபிரதேசத்தில் கையில் குழந்தையுடன் இருந்த வாலிபரை அடித்த போலீஸ் அதிகாரி

    உத்தரபிரதேசத்தில் கையில் குழந்தையுடன் இருந்த வாலிபரை அடித்த போலீஸ் அதிகாரி இடைநீக்கம்

    உத்தரபிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் போலீஸ் அதிகாரியின் தடியடிக்கு பிரியங்கா மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    கான்பூர் :

    உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அக்பர்பூர் பகுதியில் மாவட்ட ஆஸ்பத்திரி உள்ளது. அங்கு புற நோயாளிகள் பிரிவை பூட்டி விட்டு, ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். ரஜ்னிஷ் சுக்லா என்ற வாலிபர் தலைமையிலான போராட்டக்காரர்கள், டாக்டர்களையும், நோயாளிகளையும் வலுக்கட்டாயமாக புற நோயாளிகள் பிரிவில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். தகவல் அறிந்து வந்த அக்பர்பூர் போலீசார், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி வினோத்குமார் மிஸ்ராவின் பெருவிரலை ரஜ்னிஷ் சுக்லா கடித்து விட்டதாக தெரிகிறது.

    இதனால், ஆத்திரம் அடைந்த மிஸ்ரா, சுக்லாவை தடியால் கடுமையாக தாக்கினார். அப்போது கையில் தனது குழந்தையை வைத்திருந்த சுக்லா, ‘குழந்தைக்கு அடிபட்டு விடும்’ என்று கெஞ்சியும் அதிகாரி அடித்தார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து, கூடுதல் டி.ஜி.பி. உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதையொட்டி, வினோத்குமார் மிஸ்ரா இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    போலீஸ் அதிகாரியின் தடியடிக்கு பிரியங்கா மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×