search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அணை
    X
    அணை

    மாநிலங்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல்

    எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டதைக் கண்டித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுகின்றனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா இரு அவைகளிலும் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் அவை மாண்பை குலைக்கும் வகையில் செயல்பட்ட மாநிலங்களவையை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர்  இந்த கூட்டத்தொடரில் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.  இதனைக் கண்டித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுகின்றனர்.

    இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் மாநிலங்களவையில் அணை பாதுகாப்பு மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தாக்கல் செய்தார்.

    நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அணைகளை ஒரே சீராக பாதுகாப்பதற்காகவும் உருவாக்கப்பட்டதே அணை பாதுகாப்பு மசோதா. 2010ம் ஆண்டில் இருந்து இந்த மசோதா பல்வேறு அமர்வுகளில் தாக்கல் செய்தும் மாநில அரசுகளின் எதிர்ப்பு காரணமாக நிறைவேற்ற முடியாமல் உள்ளது.
    Next Story
    ×