search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    கொரோனா தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்கையை வெளியிடுங்கள் - ராகுல் காந்தி

    கொரோனாவால் குஜராத்தில் மட்டுமே 3 லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பலி தொடர்பான அரசின் எண்ணிக்கை தவறானது. பலியான ஒவ்வொருவர் குடும்பத்துக்கும் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு தர வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்கள் குடும்ப கதைகள் உண்மையானவை. அவர்களின் வலி, துன்பம் உண்மை. ஆனால் அரசின் புள்ளிவிவரம் தவறு. அரசு உண்மையான எண்ணிக்கையை வெளியிட வேண்டும்” என கூறி உள்ளார்.

    கொரோனா வைரஸ்

    கொரோனா கால அனுபவங்களை சில குடும்பங்கள் சொல்லும் வீடியோவையும் ராகுல் காந்தி பகிர்ந்து கொண்டுள்ளார்.

    அதில் ராகுல் காந்தி, “குஜராத் மாதிரி பற்றி நிறைய விவாதிக்கப்படுகிறது. ஆனால் நாம் பேசிய அனைத்து குடும்பங்களுமே கொரோனா காலத்தில் தாங்கள் உணவு, படுக்கை, ஆக்சிஜன், வென்டிலேட்டர் இல்லாமல் அவதியுற்றதாக தெரிவித்தன, கொரோனாவால் குஜராத்தில் மட்டுமே 3 லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள். ஆனால் அந்த மாநில அரசு 10 ஆயிரம் பேர் மட்டுமே கொரோனாவால் இறந்ததாக கூறுகிறது” எனவும் தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×