search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசோக் கெலாட்
    X
    அசோக் கெலாட்

    காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும்: முன்மொழிந்த ராஜஸ்தான் மாநில முதல்வர்

    அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் முன்மொழிந்துள்ளார்.
    காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பது குறித்த விவாதமே முன்னோக்கி எழும் என எதிர்பார்க்கப்பட்டது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் நடைபெற வாய்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது.

    ராகுல் காந்தி

    இந்த நிலையில் ராகுல் காந்தி அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    Next Story
    ×