search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவ்ராஜ் சிங் சவுகான்
    X
    சிவ்ராஜ் சிங் சவுகான்

    15 மாதங்களில் காங்கிரஸ் மாநிலத்தை சீரழித்துவிட்டது: ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு

    மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை பிடித்து கமல்நாத் 15 மாதங்கள் முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    மத்திய பிரதேசத்தில் கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 230 தொகுதிகளில் காங்கிரஸ் 114 இடங்களையும், பா.ஜனதா 109 இடங்களையும் பிடித்தது. ஆட்சியமைக்க 116 இடங்களை தேவை என்ற நிலையில் காங்கிரஸ் சுயேட்சை துணையுடன் ஆட்சியமைத்தது.

    ஆனால் உள்கட்சி பூசல் காரணமாக 15 மாநிலங்களில் கமல்நாத் ஆட்சியை இழந்தார். அதன்பின் பா.ஜனதா ஆட்சியமைத்தது, சிவராஜ் சிங் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    இன்று பந்தனாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஓன்றில் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

    15 மாதங்களில் காங்கிரஸ் ம.பி. மாநிலத்தை சீரழித்துவிட்டது. அனைத்து வளர்ச்சி பணிகளும் நிறுத்தப்பட்டது. நிலத்திட்டங்கள் பாதிக்கப்பட்டன. கமல்நாத் விவசாயிகளுக்கு செல்லும் பணத்தை நிறுத்தினார். ஆனால், கொரோனா காலத்தில் நான் 8 ஆயிரம் கோடி ரூபாய் பிரதமர் பாசல் பிமா யோஜனா கணக்கில் செலுத்தினேன்’’ என்றார்.

    கமல்நாத்துக்கும், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கும் இடையிலான மோதலில் சிந்தியா பா.ஜனதாவுடன் இணைந்தார். அதோடுமட்டுமல்லாமல் 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்களை தன்னுடன் இழுத்துச் சென்றார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கான பெரும்பான்மை குறைந்து கமல்நாத் ஆட்சியை இழந்தார்.

    Next Story
    ×