search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமல்நாத்"

    • ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதுபோல், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார்
    • காங்கிரஸ் கட்சி தற்போது 2-ம் கட்டமாக 43 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    அதன்படி, பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    இதனை அடுத்து, காங்கிரஸ் முதற்கட்டமாக 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதுபோல், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தற்போது தனது 2-ம் கட்டமாக 43 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அசாம், ராஜஸ்தான், குஜராத், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார்.

    மத்தியபிரதேசத்தில் முன்னாள் முதல்வர் கமல்நாத் மகன் நகுல்நாத் போட்டியிடுகிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜல்லூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் மகனான வைபவ் கெலாட் போட்டியிடுகிறார்.

    ராஜஸ்தானின் சுரு தொகுதி பாஜக எம்.பியான ராகுல் கஸ்வான் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நிலையில், அவருக்கு அதே தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்துள்ளது.

    • காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜிதேந்திரசிங் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
    • கமல்நாத் எத்தகைய முடிவு எடுப்பார் என்று தெரியாததால் குழப்பம் நீடிக்கிறது.

    மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல்நாத் தனது மகன் மற்றும் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேரப்போவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கமல்நாத்தின் உதவியாளரும், காங்கிரஸ் தலைவர்களும் மறுத்தனர். என்றாலும் கமல்நாத்தும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் தொடர்ந்து டெல்லியில் தங்கியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்யும் முயற்சியை காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மேற்கொண்டுள்ளனர்.


    காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜிதேந்திரசிங் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர் போபால் சென்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களிடம் தற்போதைய பிரச்சினைகள் பற்றி விரிவாக பேசினார். காங்கிரசில் இருந்து விலக வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். என்றாலும் கமல்நாத் எத்தகைய முடிவு எடுப்பார் என்று தெரியாததால் குழப்பம் நீடிக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கமல்நாத், தனது வீட்டில் ஏற்றப்பட்டிருந்த ஜெய் ஸ்ரீ ராம் கோடியை இன்று அகற்றியுள்ளனர்.
    • கமல்நாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜனதாவுக்கு செல்லமாட்டார் என திக்விஜய் சிங் தெரிவித்திருந்தார்.

    பாஜகவில் சேரவுள்ளதாக கூறப்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத், தனது வீட்டில் ஏற்றப்பட்டிருந்த ஜெய் ஸ்ரீ ராம் கோடியை இன்று அகற்றியுள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கமல்நாத். இவர் மத்திய பிரதேச மாநிலத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவர். மேலும், அம்மாநில முதல்வராக இருந்துள்ளார்.

    இந்நிலையில், கமல்நாத்தும் அவரது மகனான நகுல் கமல்நாத்தும் பாஜகவுக்கு தாவ போவதாக தகவல்கள் வெளியாகின. மத்திய பிரதேச மாநில அரசியலில் பரபரப்பான செய்தியாக மாறியது.

    இதற்கிடையே கமல்நாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜனதாவுக்கு செல்லமாட்டார் என திக்விஜய் சிங் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது வீட்டில் ஏற்றப்பட்டிருந்த ஜெய்ஸ்ரீ ராம் கொடியை கமல்நாத் அகற்றியுள்ளனர்.

    • மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தை தொடர்ந்து மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரியும் பாஜகவிற்கு தாவப் போவதாக தகவல்கள் தீப்போல பரவின.
    • லோக்சபா தேர்தலில் பஞ்சாப் மாநிலம் லூதியானா தொகுதியில் இருந்து மணீஷ் திவாரி பாஜக வேட்பாளராகவும் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகின.

    மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தை தொடர்ந்து மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரியும் பாஜகவிற்கு தாவப் போவதாக தகவல்கள் தீப்போல பரவின. ஆனால் மணீஷ் திவாரியின் அலுவலகம் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கமல்நாத். இவர் மத்திய பிரதேச மாநிலத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவர். மேலும், அம்மாநில முதல்வராக இருந்துள்ளார். இவரது மகன் நகுல் கமல்நாத். இவர்கள் இருவரும் பாஜகவுக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியானது. மத்திய பிரதேச மாநில அரசியலில் கடந்த சில தினங்களாக இதுதான் பரபரப்பான செய்தியாக பார்க்கப்படுகிறது.

    தற்போது கமல்நாத்தைப் போல மணீஷ் திவாரியும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேரப் போகிறார் என்ற தகவல்கள் பரவி வருகிறது.அத்துடன் லோக்சபா தேர்தலில் பஞ்சாப் மாநிலம் லூதியானா தொகுதியில் இருந்து மணீஷ் திவாரி பாஜக வேட்பாளராகவும் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகின.

    ஆனால் மணீஷ் திவாரியின் அலுவலகமோ, இது அப்பட்டமான வதந்தி. நேற்று இரவு கூட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களது இல்லத்திலேயே மணீஷ் திவாரி தங்கியிருந்தார் எனவும் விளக்கம் கொடுத்துள்ளது.

    • மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் தோல்வியால் ராகுல் காந்தி எதிர்ப்பு.
    • மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்காததால் கமல்நாத் அதிருப்தி எனத் தகவல்.

    மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அம்மாநில காங்கிரஸ் தலைவரான முன்னாள் முதல்வர் கமல்நாத்துக்கு எதிராக ராகுல் காந்தி இருப்பதாலும், மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்காததாலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதா கட்சியில் கமல் நாத் இணைய இருப்பதாக வதந்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    இன்று டெல்லில் பா.ஜனதாவின் மூத்த தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து கமல் நாத்திடம் கேள்வி கேட்கப்பட்டது.

    அப்போது பத்திரிகையாளர் ஒருவர், "நீங்கள் பா.ஜனதாவில் இணையப் போவதாக செய்திகள் வருகிறதே?" என்றார்.

    அதற்கு கமல்நாத், "அதேபோல் ஒரு விசயம் இருந்தால், நான் உங்களுக்குத்தான் முதலில் தகவல் தெரிவிப்பேன்" என்றார்.

    அதற்கு பத்திரிகையாளர், "நீங்கள் இணைவது தொடர்பாக மறுப்பு தெரிவித்ததுபோல் இல்லையே உங்கள் பதில்".. என்றார்.

    அதற்கு கமல்நாத், "இது மறுப்பது பற்றியது அல்ல. நீங்கள் இதுகுறித்து பேசுகிறீர்கள். உங்களை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சிடையகிறார்கள். இந்த பக்கமா, அந்த பக்கமா என்பது குறித்து பேசுவதில் நான் மகிழ்ச்சி அடையவில்லை. ஆனால் அதுபோன்று ஏதாவது நடந்தால், உங்களுக்குத்தான் முதலில் தகவல் தெரிவிப்பேன் என்றார்.

    கடந்த சில தினங்களாக கமல் நாத்தின் கோட்டையாக கருதப்படும் சிந்த்வாரா தொகுதியில் சுற்றுப் பயணம் செய்தார். இந்தத் தொகுதியில் இருந்து 9 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த முறை அவரது மகன் நகுல் நாத் வெற்றி பெற்றார். பா.ஜனதா 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையிலும் சிந்த்வாரா தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கை நிரூபித்தார்.

    இந்த தொகுதியில் நான்தான் வேட்பாளர் என அவரது மகன் நகுல் நாத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கமல்நாத் இன்று டெல்லி சென்று பா.ஜனதா தலைவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • அவரது மகன் நகுல் நாத் சமூக வலைத்தள முகப்பில் இருந்து காங்கிரஸ் வார்த்தையை நீக்கியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கமல்நாத். இவர் மத்திய பிரதேச மாநிலத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவர். மேலும், அம்மாநில முதல்வராக இருந்துள்ளார். இவரது மகன் நகுல் கமல்நாத்.

    இருவரும் பா.ஜனதாவுக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநில அரசியலில் கடந்த சில தினங்களாக இதுதான் பரபரப்பான செய்தியாக பார்க்கப்படுகிறது.

    இதற்கு வலுசேர்க்கும் வகையில் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான நகுல் நாத் தனது சமூக வலைத்தள முகப்பில் இருந்து காங்கிரஸ் பெயரை நீக்கியுள்ளார். அதேவேளையில் இன்று மாலை கமலாந்த் டெல்லி சென்று பா.ஜனதாவின் மூத்த தலைவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் இருவரும் பா.ஜனதாவில் சேர அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இதற்கிடையே மத்திய பிரதேச மாநில பா.ஜனதா தலைவர் வி.டி. சர்மா நேற்று, காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியின் முடிவுகளால் அப்செட் ஆகியுள்ளனர். பா.ஜனதா கட்சியின் கதவு காங்கிரஸ் கட்சியின் மேலும் சில சீனியர் காங்கிரஸ் தலைவர்களுக்காக திறந்தே இருக்கிறது.

    அந்த கட்சி தலைவர்கள் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பு விவகாரத்தில் அப்செட் ஆகியுள்ளனர். நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்களோ, அவர்களது மனதில் வலி இருந்தாலும் அவர்களும் வரவேற்கப்படுவார்கள்" என்றார்.

    மத்திய பிரதேசத்தில் முன்னாள் எம்.எல்.எ. தினேஷ் அகிர்வார் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராகேஷ் கட்டாரே ஆகியோர் கடந்த 12-ந்தேதி பா.ஜனதா கட்சியில் இணைந்தனர்.

    சிந்த்வாரா மக்களவை எம்.பி.யான நகுல் நாத், தானாகவே அந்த தொகுதிக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் என அறிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே கமல்நாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜனதாவுக்கு செல்லமாட்டார் என திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 17-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • பலத்த பாதுகாப்பை மீறி தபால் வாக்கு பெட்டியை திறந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, வாக்கு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி போலீசார், பாதுகாப்புப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எந்திரம் இருக்கும் மையத்தை யாரும் எளிதாக நெருங்கி விட முடியாது. உயர் அதிகாரிகள் இல்லாமல் திறக்க முடியாது.

    மத்திய பிரதேசத்தில் 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற போதிலும், வருகிற 3-ந்தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதனால் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக கருதி காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவினரும் அங்கேயே முகாமிட்டுள்ளனர்.

    இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாட்டுகளையும் மீறி, பாலகாட் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்கு பெட்டி வைத்திருக்கும் அறையில் பலர் தபால் வாக்குகளை கட்டு கட்டுகளாக பிரித்து வைப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பானது.

    இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள காங்கிரஸ், "இது மிகவும் முக்கியமான விசயம். குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேணடும். இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க விடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளது.

    இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. அதில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிதான் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது அதன்பின் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு, ஜோதிராதித்யா சந்தியா 20 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவில் இணைந்தார். இதனால் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தது. இதனால் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது.

    • மத்திய பிரதேசத்தில் வரும் 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • அங்கு பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் வரும் 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் கரேலி பகுதியில் காங்கிரஸ் சார்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் முதல் மந்திரி கமல்நாத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    நான் எங்கு சென்றாலும் மக்கள் சிவராஜ் சிங்குக்கு அன்பான பிரியாவிடை கொடுக்க முடிவு செய்திருப்பதைக் காண்கிறேன்.

    சிவராஜ் சிங் 22,000 அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார்.

    கடந்த 5 மாதங்களில் அவரது அறிவிப்பு மெஷின் இரட்டிப்பு வேகத்தில் இயங்கியது.

    ஆனால் அறிவிப்பு மெஷினின் பேட்டரி விரைவில் தீர்ந்துவிடும் என தெரிவித்தார்.

    • ஹேக்கர்களை தனது பங்களாவுக்கு வந்து கேட்ட பணத்தை வாங்கி செல்லுமாறு கோவிந்த் கோயல் கூறினார்.
    • மறைந்திருந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    குவாலியர்:

    மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ் மூத்த தலைவராகவும் இருந்து வருபவர் கமல்நாத். இவரது மொபைல் போனை மர்ம மனிதர்கள் ஹேக் செய்தனர். பின்னர் இவரது போனில் இருந்து காங்கிரஸ் பொருளாளர் அசோக் சிங் என்பவரை ஹேக்கர்கள் தொடர்பு கொண்டு ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினார்கள்.

    இதேபோல இந்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுர்ஜித்சிங் சதா, குவாலியர் எம்.எல்.ஏ. சதீஷ் சகார்வார் மற்றும் முன்னாள் காங்.பொருளாளர் கோவிந்த் கோயல் ஆகியோரையும் போனில் மிரட்டினார்கள்.

    இதையடுத்து அந்த மர்ம மனிதர்களை கையும், களவுமாக பிடிக்க காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தனர். ஹேக்கர்களை தனது பங்களாவுக்கு வந்து கேட்ட பணத்தை வாங்கி செல்லுமாறு கோவிந்த் கோயல் கூறினார். உடனே 2 பேர் அவரது பங்களாவுக்கு பணம் வாங்க வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்களது பெயர் சாகர்சிங் பார்மர், பிந்து பார்மர் என்பதும் இருவரும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியே அனைத்து எதிர்க்கட்சிகளாலும் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார்.
    • உலக அரசியல் வரலாற்றில் இவ்வளவு நீண்ட தூரத்துக்கு நடைப்பயணத்தை இதுவரை யாரும் மேற்கொண்டது இல்லை.

    காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான கமல்நாத் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

    வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் முகமாக ராகுல் காந்தி திகழ்வார். பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியே அனைத்து எதிர்க்கட்சிகளாலும் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார். உலக அரசியல் வரலாற்றில் இவ்வளவு நீண்ட தூரத்துக்கு நடைப்பயணத்தை இதுவரை யாரும் மேற்கொண்டது இல்லை.

    அதேபோல் இந்திய நாட்டுக்காக இவ்வளவு தியாகங்களையும் நேருவின் குடும்பத்தை தவிர வேறு யாரும் செய்ததில்லை. ஆட்சி அதிகாரத்துக்காக ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொள்ளவில்லை. யாரை வேண்டுமானாலும் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தும் வல்லமை கொண்ட மக்களின் நலனுக்காகவே அவர் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மத்திய பிரதேச மாநில முதல்வராக கமல் நாத் பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள மம்தா மற்றும் மாயாவதிக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. #kamalNath
    போபால்:

    மத்திய பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. மத்திய பிரதேச முதல்- மந்திரியாக கமல்நாத் நாளை (17-ந்தேதி) பதவியேற்கிறார்.

    பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கும், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்-மந்திரிகளுக்கும் கமல்நாத் அழைப்பு விடுத்துள்ளார்.

    இதேபோல் முக்கிய தொழில் அதிபர்கள், மத துறவிகளும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். எம்பி-யாக இருக்கும் கமல் நாத் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் 6 மாதங்களுக்குள் அவர் தேர்தலில் வெற்றிபெற்று எம்எல்ஏ ஆக வேண்டும்.

    சிந்துவாரா மாவட்டத்தில் உள்ள சவுன்சர் தொகுதியில் அவர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் 20,742 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதி என்பதால் இங்கு கமல்நாத் போட்டியிடுகிறார்.
    ×