ஜெய்ஸ்ரீராம் கொடியை அகற்றிய கமல்நாத்: பாஜகவுக்கு தாவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி?

கமல்நாத், தனது வீட்டில் ஏற்றப்பட்டிருந்த ஜெய் ஸ்ரீ ராம் கோடியை இன்று அகற்றியுள்ளனர்.கமல்நாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜனதாவுக்கு செல்லமாட்டார் என திக்விஜய் சிங் தெரிவித்திருந்தார்.
ஜெய்ஸ்ரீராம் கொடியை அகற்றிய கமல்நாத்: பாஜகவுக்கு தாவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி?
Published on

பாஜகவில் சேரவுள்ளதாக கூறப்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத், தனது வீட்டில் ஏற்றப்பட்டிருந்த ஜெய் ஸ்ரீ ராம் கோடியை இன்று அகற்றியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கமல்நாத். இவர் மத்திய பிரதேச மாநிலத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவர். மேலும், அம்மாநில முதல்வராக இருந்துள்ளார்.

இந்நிலையில், கமல்நாத்தும் அவரது மகனான நகுல் கமல்நாத்தும் பாஜகவுக்கு தாவ போவதாக தகவல்கள் வெளியாகின. மத்திய பிரதேச மாநில அரசியலில் பரபரப்பான செய்தியாக மாறியது.

இதற்கிடையே கமல்நாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜனதாவுக்கு செல்லமாட்டார் என திக்விஜய் சிங் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது வீட்டில் ஏற்றப்பட்டிருந்த ஜெய்ஸ்ரீ ராம் கொடியை கமல்நாத் அகற்றியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com