search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    4 மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

    4 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்து பாரதிய ஜனதா கட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
    சென்னை:

    உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், குஜராத் உள்ளிட்ட 5 மாநிலங்களில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளைத் துவங்கியுள்ள பாஜக, 4 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பொறுப்பாளர்களை இன்று நியமித்துள்ளது. 

    மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை உத்திர பிரதேச தேர்தல் பொறுப்பாளராகவும், பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரல்ஹாத் சிங் ஜோஷியை, உத்தரகாண்ட் தேர்தல் பொறுப்பாளராகவும் நியமித்துள்ளது.

    மேலும் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை பஞ்சாப் மாநில தேர்தல் பொறுப்பாளராகவும், மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்திர யாதவை மணிப்பூர் மாநில தேர்தல் பொறுப்பாளராகவும் தேசியத் தலைவர் ஜேபி. நட்டா நியமித்துள்ளார். 

    தர்மேந்திர பிரதானுடன், 7 பேர் துணை பொறுப்பாளர்களாகவும், கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி மற்றும் மீனாட்சி லேகி, மக்களவை உறுப்பினர் வினோத் சவ்தா உள்ளிட்டோர் கூடுதல் பொறுப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×