search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது- மத்திய அரசு தகவல்

    டெல்டா வைரசின் துணை வரிசை வைரஸ்களான டெல்டா பிளஸ் ஏஒய் 1 முதல் ஏஒய்12 வரையில் மொத்தம் 856 பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளும் இந்த திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு போடப்படுகிறது. தடுப்பூசிபோடுகிறபோதும், சிலருக்கு வைரஸ் தொற்று ஏற்படத்தான்செய்கிறது. குறிப்பாக டெல்டா வைரஸ் தாக்குதல் இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆனாலும் அந்த எண்ணிக்கை கட்டுக்குள் (எதிர்பார்த்த எண்ணிக்கைக்குள்) இருக்கிறது என்று மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இன்சாகாக் என்று அழைக்கப்படுகிற இந்திய சார்ஸ் கோவ்-2 மரபணு கூட்டமைப்பு கூறுகிறது.

    இதுபற்றி அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

    * இந்தியாவிலும், உலக நாடுகளிலும் டெல்டா வைரஸ் ஆதிக்கம் செலுத்துகிறது.

    * இந்தியாவை பொறுத்தமட்டில் டெல்டா வைரசுக்கு எதிராக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவுதான் என்ற நிலையிலும், தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு வருவது என்பது எதிர்பார்த்த எண்ணிக்கைக்குள்தான் இருக்கிறது.

    மத்திய அரசு


    * தடுப்பூசிகளைப் பொறுத்தமட்டில், கடுமையான நோய்த்தொற்றில் இருந்து தொடர்ந்து பாதுகாக்கின்றன. பொது சுகாதார உத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    * டெல்டா வைரசின் துணை வரிசை வைரஸ்களான டெல்டா பிளஸ் ஏஒய் 1 முதல் ஏஒய்12 வரையில் மொத்தம் 856 பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக அளவில் இணையதளங்களில் பதிவான எண்ணிக்கையை விட மிகக்குறைவு.

    * ஏஒய்.12 வைரஸ் இஸ்ரேலில் முதலில் காணப்பட்டது. அங்கு பரவி வருகிறது. அந்த நாட்டில் இதற்கு எதிராக 60 சதவீத மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இந்தியாவில் இந்த வைரஸ் இன்னும் காணப்படவில்லை.

    * உலகளவில் கவலைக்குரிய புதிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் இல்லை.

    * ஏஒய்.4 வைரஸ், டெல்டாவின் மிகப்பெரிய பரிணாமக் கிளை ஆகும். இதுநேரம் மற்றும் பரவலுடன் எதிர்பார்க்கப்படுவதாகும். தற்போது அறியப்பட்ட மருத்துவ முக்கியத்துவம் இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×