search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி போடும் பணி
    X
    தடுப்பூசி போடும் பணி

    இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 60 கோடியை தாண்டியது

    நாடு முழுவதும் இன்று பொதுமக்களுக்கு 66 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16-ந்தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் தடுப்பூசி தொடர்பான அச்சம், தடுப்பூசி கிடைப்பதில் தாமதம் போன்ற காரணங்களால் குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல் 10 கோடி தடுப்பூசி போடுவதற்கு 83 நாட்கள் ஆனது. அதன்பின்னர் தடுப்பூசி போடும் பணி வேகமெடுத்தது. 

    இதனால் 2-வது 10 கோடி தடுப்பூசி 45 நாட்களிலும், 3-வது 10 கோடி தடுப்பூசி 29 நாட்களிலும், 4-வது 10 கோடி  24 நாட்களிலும், 5-வது 10 கோடி தடுப்பூசி 20 நாட்களிலும் எட்டிப்பிடித்து கடந்த 7ம்தேதி 50 கோடி என்ற நிலையை எட்டியது. செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை இன்று 60 கோடியை கடந்துள்ளது. 

    மன்சுக் மாண்டவியா

    இன்று ஒரே நாளில் 66 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 60,24,25,271 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். 

    இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்குடன் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. 

    Next Story
    ×