என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இமாச்சல பிரதேச நிலச்சரிவு- இதுவரை 13 சடலங்கள் மீட்பு
Byமாலை மலர்12 Aug 2021 4:52 AM GMT (Updated: 12 Aug 2021 4:52 AM GMT)
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் வானிலை சீராக இருந்தால், ராணுவம் தனது ஹெலிகாப்டரை மீட்புப் பணியில் ஈடுபடுத்தும் என முதல்வர் ஜெய்ராம் தாகூர் தெரிவித்தார்.
சிம்லா:
இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. நேற்று கின்னார் மாவட்டத்தில் ரெக்காங் பியோ - சிம்லா தேசிய நெடுஞ்சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு சரக்கு வாகனம் மற்றும் பேருந்து உள்ளிட்ட சில வாகனங்கள் சிக்கிக்கொண்டன. அந்த வாகனங்களில் இருந்தவர்களில் பலர் மண்ணில் புதைந்தனர்.
இந்தோ - திபெத் எல்லை காவல் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியை தொடங்கினர். இறந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இன்று காலை நிலவரப்படி 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் 60 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது.
‘பேருந்தில் பயணம் செய்த பயணிகள் எத்தனை பேர் என்பது தெரியவில்லை. பேருந்து இன்னும் இடிபாடுகளுக்குள் புதைந்து கிடக்கிறது. வானிலை சீராக இருந்தால், ராணுவம் தனது ஹெலிகாப்டரை மீட்புப் பணியில் ஈடுபடுத்தும். நான் இன்று நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தைப் பார்வையிட திட்டமிட்டுள்ளேன்’ என முதல்வர் ஜெய்ராம் தாகூர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியது
Next Story
×