search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான சேவை
    X
    விமான சேவை

    சர்வதேச விமான சேவைக்கு ஆகஸ்டு 31 வரை தடை நீட்டிப்பு

    கொரோனா பரவல் அதிகரிப்பால் கடந்த ஆண்டு மார்ச் 23 முதல் இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதனால் கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ஆனால், வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்கள் நாடு திரும்பவும் இங்கு சிக்கிய வெளிநாட்டினர் சொந்த நாட்டுக்கு திரும்பவும் வசதியாக மே மாதம் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி சிறப்பு விமானங்கள்  தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. 

    எனினும், ஏற்கனவே,  திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை  ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

    இந்நிலையில், சர்வதேச விமான சேவைக்கான தடை வரும் ஆகஸ்ட்  31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. 
    Next Story
    ×