search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனாட்சி லேகி
    X
    மீனாட்சி லேகி

    போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, குண்டர்கள் -மத்திய மந்திரி மீனாட்சி லேகி ஆவேசம்

    டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய கலாச்சாரத்துறை மந்திரி மீனாட்சி லேகி, விவசாயிகளின் போராட்டத்தை கடுமையாக சாடினார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாதிரி பாராளுமன்றம் நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த போராட்டத்தின்போது பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய கலாச்சாரத்துறை மந்திரி மீனாட்சி லேகி, விவசாயிகளின் போராட்டத்தை கடுமையாக சாடியுள்ளார்.
     
    ‘டெல்லியில் போராடும் அவர்கள் விவசாயிகள் அல்ல, அவர்கள் குண்டர்கள். அவர்கள் செய்பவை குற்றச் செயல்கள். ஜனவரி 26 அன்று நடந்ததும் வெட்கக்கேடான குற்றவாளிகளின் நடவடிக்கைகள். ஆனால், எதிர்க்கட்சிகளோ இது போன்ற விவசாயிகளின் போராட்டத்தை ஊக்குவிக்கின்றன’ என்று மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×