search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனாட்சி லேகி"

    • கோழிக்கோட்டில் நடந்த மாநாட்டில் மத்திய மந்திரி மீனாட்சி லேகி பங்கேற்றார்.
    • அப்போது, பாரத் மாதா கீ ஜே என கூறாதவர்கள் அரங்கை விட்டு வெளியேறுங்கள் என்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேரு யுவகேந்திரா மற்றும் கேலோ பாரத் சார்பில் விவேகானந்தர் பிறந்தநாளை ஒட்டி இளைஞர்கள் விழிப்புணர்வு மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் எனது மனம் கவர்ந்த தலைவர்களில் ஒருவர். இதற்கு காரணம் ராஜீவ் காந்தி மந்திரிசபையில் அவர் ராஜினாமா செய்தது, ஷாபானு வழக்கில் முத்தலாக்கை தடுத்து நிறுத்த வலியுறுத்தியதே ஆகும். அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். தற்போது முத்தலாக் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.

    நாட்டின் மக்கள்தொகையில் 35 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் 65 சதவீதம் பேர் உள்ளனர். பிரதமர் மோடியின் வாக்குறுதி மக்களுக்கான வாக்குறுதியாகும். அதனால்தான் பல்வேறு நலத்திட்டங்களை விரைவாக ஊழல் இன்றி செயல்படுத்த முடிந்தது என தெரிவித்தார்.

    பேச்சின் முடிவில் அவர் 'பாரத் மாதா கீ ஜே' என முழக்கமிட்டார். அதற்கு பார்வையாளர்களிடம் இருந்து எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால், இந்தியா உங்கள் தாய் அல்லவா? என்று கேட்டார். சொல்லுங்கள், சந்தேகம் உள்ளதா என மத்திய மந்திரி மீனாட்சி லேகி கூறினார்.

    அதன்பின், அவர் திரும்ப திரும்ப முழக்கத்தைச் சொன்னார். அப்போது முழக்கமிடாமல் இருந்த பெண்ணை சுட்டிக்காட்டினார். அந்தப் பெண் எதுவும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தார். இதில் ஆத்திரம் அடைந்த மத்திய மந்திரி, பாரத் மாதா கீ ஜே என கோஷம் எழுப்ப தயங்குபவர்கள் அரங்கை விட்டு வெளியேறுங்கள் என காட்டமாக கூறினார்.

    தொடர்ந்து அவர், பாரத் மாதா கீ ஜே என முழக்கமிட்டார். அப்போது அங்கிருந்த அனைவரும் பாரத் மாதா கீ ஜே என முழக்கமிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் டெல்லி சேவைகள் மசோதா நிறைவேற்றப்பட்டது.
    • கலாச்சாரத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி பேசும்போது ஆம் ஆத்மி கட்சியினர் கூச்சலிட்டனர்.

    புதுடெல்லி:

    டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) சமீபத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விவாதத்திற்குப் பிறகு உள்துறை மந்திரி அமித் ஷா பதிலுரை வழங்கினார்.

    அதன்பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்து பா.ஜ.க. எம்.பி.க்கள் பேசினர்.

    டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பா.ஜ.க. பேசிவந்த நிலையில் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் உள்ள இந்த சட்ட மசோதாவுக்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கலாச்சாரத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி பேசிக் கொண்டிருக்கும்போது, ஆம் ஆத்மி கட்சியினர் கூச்சலிட்டனர்.

    இதனால் கோபமடைந்த அவர், வாயை மூடிக்கொண்டு அமைதியாக உட்காருங்கள், இல்லையெனில் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத் துறை வரும் என எச்சரித்தார்.

    பாராளுமன்றத்தில் எம்.பி.க்களை மிரட்டும் அவரது இந்தப் பேச்சு அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்தியா தியானத்தினால் சுதந்திரம் அடைய முடியும் என்ற தன்னம்பிக்கையை விவேகானந்தர் ஏற்படுத்தினார்.
    • நம்மை சுற்றி ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மை யோகா பயிற்சியால் ஏற்படும்.

    சர்வதேச யோக தின கொண்டாட்டததின் ஒரு பகுதியாக கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத் துறை இணை மந்திரி மீனாட்சி லேகி கலந்து கொண்டார்.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு மூலம் சென்ற அவர் , விவேகானந்தர் உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் விவேகானந்தர் பாறையில் அமர்ந்து யோகாசனம் செய்தார். 


    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி விவேகானந்தா மைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது:

    யோகா செய்வதன் மூலம் மனம், உடல், ஆன்மா ஒருங்கிணைக்கப்படுகிறது. நம்மை சுற்றி ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மை யோகா பயிற்சியால் ஏற்படும். மிகப்பெரிய நாடான இந்தியா தியானத்தினால் சுதந்திரம் அடைய முடியும் என்ற தன்னம்பிக்கையை சுவாமி விவேகானந்தர் ஏற்படுத்தினார்.

    நாட்டின் கலாச்சாரத்திலும் ஆன்மீகத்திலும் நம்பிக்கை கொண்டிருந்த சுவாமி விவேகானந்தர் நாட்டின் கலாச்சாரத்திற்காக, நாட்டுக்காக தொடர்ந்து பாடுபட்டது போல், பிரதமர் மோடி தொடர்ந்து நாட்டு நலனுக்காக அயராது பாடுபட்டு வருகிறார். இவ்வாறு மத்திய இணை மந்திரி மீனாட்சி லேகி தெரிவித்தார்.

    ×