search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுவர்கள்
    X
    சிறுவர்கள்

    தொடக்கப்பள்ளிகள் திறக்கப்படுகிறதா?- ஐசிஎம்ஆர் முக்கிய தகவல்

    கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
    புதுடெல்லி:

    தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது பள்ளிகளை திறக்கலாம் என ஐசிஎம்ஆர் அனுமதி அளித்துள்ளது.

    கொரோனா வைரஸ்

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதுகுறித்து கூறியபோது, பெரியவர்களை விட குழந்தைகள் மிகவும் திறம்பட
    கொரோனா வைரஸ்
    களை கையாள முடியும் என்பது கண்டறியப்பட்டு உள்ளதால் முதல்கட்டமாக துவக்கப் பள்ளிகளை திறக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

    பள்ளிகளில் பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓட்டுநர்கள் என அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்ட பின் துவக்கப்பள்ளிகளை திறக்கலாம் என்றும், ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் இது போல் துவக்கப்பள்ளிகளை தான் முதலில் திறந்து நடத்தி வருகிறார்கள் என்றும் ஐசிஎம்ஆர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


    Next Story
    ×