search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் மல்லையா
    X
    விஜய் மல்லையா

    வங்கியில் கடன் மோசடி- விஜய் மல்லையா நிறுவன பங்குகள் ரூ.792 கோடிக்கு விற்பனை

    சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ், விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன பங்குகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்திருந்தது
    புதுடெல்லி:

    பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா, லண்டனுக்கு தப்பி சென்று விட்டார். அவரை நாடு கடத்த லண்டன் கோர்ட்டு அனுமதி அளித்து விட்டது.

    அவரது வங்கிக்கடன் மோசடியை சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் விசாரித்து வருகின்றன. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ், விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன பங்குகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்திருந்தது

    கடந்த மாதம், இவற்றில் சில பங்குகளை வங்கிகளிடம் அமலாக்கத்துறை ஒப்படைத்தது. அந்த பங்குகளை விற்றதன் மூலம் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளுக்கு ரூ.7 ஆயிரத்து 181 கோடி வருவாய் கிடைத்தது.

    இந்தநிலையில், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மேலும் சில பங்குகளை விற்றதன் மூலம் வங்கிகளுக்கு நேற்று ரூ.792 கோடியே 11 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

    இந்த தகவல்களை அமலாக்கத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

    விஜய் மல்லையா மோசடியிலும், நிரவ் மோடி, மெகுல் சோக்சி சம்பந்தப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியிலும் மொத்தம் ரூ.22 ஆயிரத்து 585 கோடி பறிபோய் விட்டது. தற்போதுவரை, அந்த இழப்பில் 58 சதவீத மதிப்புள்ள சொத்துகள் அரசு மற்றும் வங்கிகள் வசம் திரும்பி வந்து விட்டதாகவும் அமலாக்கத்துறை இயக்குனரகம் கூறியுள்ளது.
    Next Story
    ×