search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாட்ஸ்அப்
    X
    வாட்ஸ்அப்

    20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை முடக்கியது வாட்ஸ்அப்

    முன்று கட்டங்களாக ஆராய்ந்து அதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறும் பயனாளரின் கணக்கு முடக்கப்படும் என வாட்ஸ்அப் கூறி உள்ளது.
    இந்தியா: 

    இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. சமூக வலைத்தளங்கள் இந்த விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. 

    இந்நிலையில், புதிய விதிகளுக்குட்பட்டு மே 15-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதிக்குள் வாட்ஸ்அப் பயனர்களின் இருபது லட்சம் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கி உள்ளது. 

    இதுபற்றி வாட்ஸ்அப் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் "நாங்கள் தவறுகள் நடக்கும் முன்பாக தடுப்பதில் கவனம் செலுத்துகிறோம். ஒருவரின் கணக்கில் முன்று கட்டங்களாக ஆராய்ந்து அதாவது, பதிவு செய்தல், தகவலை அனுப்புதல் மற்றும் அதற்கான எதிர்மறையான கருத்துக்களை பெறும் போது கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறும் பயனாளரின் கணக்கு முடக்கப்படும். 

    எங்களின் குழு  இதுபோன்ற செயல்களை ஆராய்ந்து மேற்கொள்ளும் முடிவுகள் எங்களது செயல்திறனை மேம்படுத்த வழிசெய்யும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×