search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    3-வது அலை அறிகுறியா?- டெல்லி, மகாராஷ்டிராவில் கொரோனா பலி அதிகரிப்பு

    காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களில் கொரோனா தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. டெல்லி போன்ற நகரங்களில் காற்று மாசு ஒரு சதுர மீட்டருக்கு 2.5 என்ற அளவில் உள்ளது.

    புதுடெல்லி:

    கொரோனா  2-வது அலையின் தாக்கம் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆனால் அது இப்படியே நீடிக்காது. அடுத்து 3-வது அலை விரைவில் வரப் போகிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

    3-வது அலையும் தாக்குதலை தொடங்கும் என்பதற்கான சில அறிகுறிகள் தென்படத் தொடங்கி உள்ளன. நோய் தொற்று சரிந்து வந்த சில இடங்களில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

    முதல் அலையிலும், 2-வது அலையிலும் மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த மாநிலங்களில் நோய் தொற்று குறைந்து வந்த நிலையில் நேற்று திடீரென மேலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    மகாராஷ்டிராவில்  நேற்று 371 பேர் உயிரிழந்தனர். அதேபோல கேரளாவில் 135 பேரும், தமிழ்நாட்டில் 115 பேரும் உயிரிழந்து இருக்கிறார்கள்.

    கொரோனா வைரஸ்

    டெல்லியை பொறுத்த வரை நேற்று முன்தினம் உயிரிழப்பு 5 ஆக இருந்தது, அது 7 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல புதிய நோய் தொற்று நேற்று முன்தினம் 86 ஆக இருந்தது. அது 94 ஆக அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அதிகரிப்பதும் 3-வது அலையின் அறிகுறி என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    மேலும் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களில்  கொரோனா  தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. டெல்லி போன்ற நகரங்களில் காற்று மாசு ஒரு சதுர மீட்டருக்கு 2.5 என்ற அளவில் உள்ளது. எனவே 3-வது அலை வந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

    டெல்லியில் இதுவரை 24 ஆயிரத்து 995 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். 25 ஆயிரத்தை தொடுவதற்கு இன்னும் 5 எண்ணிக்கைதான் உள்ளது.

    3-வது அலை டெல்லியை கடுமையாக தாக்கலாம் என்று கூறப்படுவதால் அது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.

    இந்தியாவில்  கொரோனா  மரணம் நேற்று 955 ஆக இருந்தது. அதற்கு முந்தைய நாள் 738 பேர் மட்டுமே இறந்தனர். அந்த உயிரிழப்பும் அதிகரித்து இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.

    இதையும் படியுங்கள்....  உலகம் முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.45 கோடியைக் கடந்தது

    Next Story
    ×