search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டி - காங்கிரஸ் அறிவிப்பு

    உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றது.
    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தனித்துப் போட்டியிடப் போவதாக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை அறிவித்துள்ளன.

    இந்நிலையில், காங்கிரசின் நிலைப்பாடு குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லுவிடம் கூறியதாவது:

    சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடும் திறன் காங்கிரசுக்கு இருக்கிறது. அந்தக் கட்சிகளை விட காங்கிரஸ்தான் உறுதியான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.

    உத்தர பிரதேசத்தில் மாற்றத்துக்கான காற்று வீசி வருகிறது. அந்த மாற்றத்தின் பெயர் பிரியங்கா காந்தி. அவர் உ.பி. காங்கிரஸ் பொறுப்பாளராக இருக்கிறார். அவரது மேற்பார்வையில் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம். அதன்மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு உ.பி.யில் ஆட்சி அமைப்போம் என்றார்.
    Next Story
    ×