search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிகே சிவக்குமார்
    X
    டிகே சிவக்குமார்

    கர்நாடகத்தில் கொரோனாவுக்கு 3.27 லட்சம் பேர் உயிரிழப்பு: டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு

    நாங்கள் கிராம அளவில் குழுக்களை அமைத்து, கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுமாறும், உதவிகளை செய்யுமாறும் கூறி இருக்கிறோம்.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    எங்களின் குரல் அரசின் காதில் விழவில்லை. மக்களின் வலி, வேதனைகளை அரசு புரிந்து கொள்ளவில்லை. ஆனால் காங்கிரஸ் மற்றும் கோர்ட்டுகளுக்கு மக்களின் நிலை புரிகிறது. கர்நாடக ஐகோர்ட்டு தொடர்ச்சியாக மக்களுக்கு ஆதரவாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 6 மாதத்தில் வழிகாட்டுதலை வகுத்து வெளியிடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக கோர்ட்டுகளுக்கு மக்களின் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்.

    சாம்ராஜ்நகரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 36 பேர் உயிரிழந்தனர். ஆனால் 24 பேரின் குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 பேரின் குடும்பங்களுக்கு அரசு இன்னும் நிவாரணம் வழங்கவில்லை. இந்த சம்பவத்திற்கு அரசு சார்பில் இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. அரசு தவறு செய்யவில்லை என்றால், கொரோனாவால் இறந்தவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறாதது ஏன்?.

    மக்களின் கஷ்டங்களை கேட்க முடியாவிட்டால் இந்த அரசு எதற்காக இருக்க வேண்டும். முதல்-மந்திரியே செல்ல வேண்டும் என்று இல்லை. மந்திரிகள் போய் இந்த வேலையை ஏன் செய்யக்கூடாது. ஆக்சிஜன் பற்றாக்குயைால் தான் சாம்ராஜ்நகரில்
    கொரோனா
    நோயாளிகள் உயிரிழந்தனர் என்று ஐகோர்ட்டே கூறியுள்ளது. அப்படி என்றால் அங்கு நிகழ்ந்தது இயற்கையாக நிகழ்ந்த மரணங்களா? அல்லது கொலையா? என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும்.

    நான் சாம்ராஜ்நகருக்கு சென்று இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். அவர்களின் நிலை கண்டு நான் மிகுந்த மன வேதனைக்கு ஆளானேன். அங்கு 36 பேர் துடிதுடித்து இறந்துள்ளனர். இறந்த 36 பேரில் சுமார் 30 பேர் 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். ஒருவருக்கு திருமணமாகி 3 மாதங்கள் தான் ஆகி இருந்தது. மற்றொருவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.

    இந்த சம்பவம் குறித்து சட்டசபையில் பேசுவேன். சாம்ராஜ்நகரில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் கட்சி சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு இதுவரை இறப்பு சான்றிதழ் கொடுக்கவில்லை. அரசின் இணையதள பக்கத்தில் உள்ள தகவல்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 லட்சத்து 27 ஆயிரத்து 985 பேர் இறந்துள்ளனர். ஆனால் மாநில அரசின் சுகாதாரத்துறை, இதுவரை 30 ஆயிரம் பேர் தான் இறந்துள்ளனர் என்று சொல்கிறது. அரசு உண்மை தகவல்களை மூடிமறைக்கிறது.

    அப்படி என்றால் மற்ற குடும்பங்களுக்கு யார் நிவாரணம் கொடுப்பார்கள். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்தவர்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கொரோனாவால் இறந்த அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். நாங்கள் கிராம அளவில் குழுக்களை அமைத்து, கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுமாறும், உதவிகளை செய்யுமாறும் கூறி இருக்கிறோம். அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணம் தகுதியான தொழிலாளர்களுக்கு முழுமையாக போய் சேரவில்லை. இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    Next Story
    ×