search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரிசோதனை
    X
    பரிசோதனை

    இந்தியாவில் 51 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று- கண்காணிப்பை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

    நாட்டில் கொரோனா இரண்டாவது அலை இன்னும் ஓயவில்லை என்று எச்சரித்துள்ள மத்திய அரசு, 75 மாவட்டங்களில் பாதிப்பு சதவீதம் இன்னும் 10 சதவீதத்திற்கு மேல் நீடிப்பதாக கூறி உள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா வைரசின் 2-வது அலை நாட்டில் குறைய தொடங்கியுள்ள  சமயத்தில் புதிதாக டெல்டா பிளஸ் தொற்று மெல்ல பரவி நாட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா 3வது அலைக்கு டெல்டா பிளஸ் வைரஸ் காரணமாகிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. 

    இந்தியாவில் இதுவரை 12 மாநிலங்களில் 51 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 45000 சாம்பிள்களை பரிசோதனை செய்ததில் 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 22 பேருக்கு 
    டெல்டா பிளஸ்
     தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 7 பேருக்கும், கேரளாவில் மூன்று பேருக்கும், பஞ்சாப், குஜராத்தில் தலா 2 பேருக்கும், ஆந்திரா, ஒடிசா, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், அரியானா மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவருக்கும் டெல்டா பிளஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தடுப்பூசி போடும் பணி

    90 சதவீதம் கொரோனா பாதிப்புக்கு டெல்டா வைரசே காரணம் என கூறியிருக்கும் மத்திய அரசு, 175 மாவட்டங்களில் இந்த கவலைக்குரிய மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், தெலுங்கானா, மேற்கு வங்காளம், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் கொரோனா இரண்டாவது அலை இன்னும் ஓயவில்லை என்று எச்சரித்துள்ள மத்திய அரசு, 75 மாவட்டங்களில் பாதிப்பு சதவீதம் இன்னும் 10 சதவீதத்திற்கு மேல் நீடிப்பதாகவும், 92 மாவட்டங்களில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

    டெல்டா பிளஸ் வைரஸ் காணப்படும் தமிழகம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய அரசு, கண்காணிப்பை அதிகரித்து, வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.

    மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதி உள்ள கடிதத்தில், மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும், பரிசோதனையை அதிகரிக்க வேண்டும், தேவை அதிகம் இருக்கும் மாவட்டங்களின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்துதலை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
    Next Story
    ×