search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    சர்வதேச யோகா தின கொண்டாட்டம் -நாளை காலை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

    15 ஆன்மிக தலைவர்கள் மற்றும் யோகா குருக்கள், ஆரோக்கிய வாழ்விற்கான யோகா குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள உள்ளனர்.
    புதுடெல்லி:

    7 வது சர்வதேச யோகா தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு யோகா தினத்தின் முக்கிய கருப்பொருள் 'ஆரோக்கியத்திற்கான யோகா' என்பதாகும். 

    டெல்லியில் நடக்கவுள்ள சர்வதேச யோகா தின கொண்டாட்டம், காலை 6:30 மணி முதல் துார்தர்ஷன் 'டிவி' சேனல்களில் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்ற உள்ளார். மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணை மந்திரி கிரண் ரிஜிஜுவும் உரை நிகழ்த்த உள்ளார். 

    அதன்பின்னர் யோகா செயல்முறை விளக்கம் நடைபெறும்.  ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், சத்குரு ஜக்கி வாசுதேவ், எச்ஆர் நாகேந்திரா, கமலேஷ் படேல் உள்ளிட்ட 15 ஆன்மிக தலைவர்கள் மற்றும் யோகா குருக்கள், ஆரோக்கிய வாழ்விற்கான யோகா குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள உள்ளனர். 

    வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், அந்தந்த நாடுகளில் பல்வேறு யோகா தின நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றன. உலக அளவில் சுமார் 190 நாடுகளில் யோகா தினம் கொண்டாடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×