என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திரா, கேரளா மாநிலத்தின் இன்றைய கொரோனா அப்டேட்ஸ்
Byமாலை மலர்17 Jun 2021 3:16 PM GMT (Updated: 17 Jun 2021 3:16 PM GMT)
ஆந்திராவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,40,281-ஆக அதிகரித்துள்ளது.
ஐதராபாத்:
ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆந்திராவில் இன்று புதிதாக 6,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு இதுவரை பதிவான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 18,32,902 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 58 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,167 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 7,728 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் ஆந்திராவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,40,281-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 69,831 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதேபோல் கேரள சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கேரளாவில் இன்று 1,14,894 மாதிரிகளை பரிசோதனை செய்ததில் புதிதாக 12,469 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 88 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,743 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 13, 614 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் கேரளாவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,41,204-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 1,08,560 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story
×