search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி சென்ற கவர்னர் ஜக்தீப் தங்கர்
    X
    டெல்லி சென்ற கவர்னர் ஜக்தீப் தங்கர்

    டெல்லி சென்றடைந்தார் மேற்கு வங்காள கவர்னர்

    மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கும், மாநில கவர்னர் ஜக்தீப் தங்காருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக அதிகார மோதல் போக்கு நிலவிவருகிறது.
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் பலர் உயிரிழந்தனர். தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற பின்னர் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது திரிணாமுல் காங்கிரஸ் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். பெண்கள்மீது பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களும் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் மேற்கு வங்காளத்தில் வன்முறை நடைபெற்ற பகுதிகளை நேரில் பார்வையிட்டனர். அதேபோல் மாநில கவர்னரும் வன்முறை நடைபெற்ற பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.

    இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில கவர்னர் ஜக்தீப் தங்காருக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

     முதல் மந்திரி மம்தா பானர்ஜி

    இதற்கிடையே, மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப் தங்கார் டெல்லி செல்ல உள்ளர். இந்தப் பயணத்தின்போது மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கவர்னர் அறிக்கை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப் தங்கார் நேற்று நள்ளிரவு டெல்லி சென்றடைந்தார்.

    தனது டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு கவர்னர் ஜக்தீப் வரும் 18-ம் தேதி கொல்கத்தா திரும்புகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×